Friday, April 16, 2021

காலாதீதம்

ஒற்றைக் காலின் தடங்களை
இழுத்துக் கொண்டு 
கடல் மீளும் நுரை

அடுத்த அலைவரக்
காத்திருக்கும்
எஞ்சும் மறுகால் பதிவுகள் 

பின்வாங்கிச் செல்லும் 
வெண்விளிம்பின் குரூரம்
இயலா நடையின் அறுதடம்  

அலைகளுக்கிடையே
காலாதீதங்களில் நிற்கும்
ஒற்றைப் பாதங்களின் தவம்




No comments:

Post a Comment