Saturday, April 17, 2021

இரவு

இருளை அருந்தியபடி

திசையழித்து வழிந்தோடும் பால்

மிதக்கும் சில வெள்ளெறும்புகள்

தலைகீழ் வான்வெளியில்

ஓயாமல் தலைமோதும் அலைகள்

கடல் நோக்கி சென்று

மீளாத சுவடுகளை 

உற்று நோக்குகிறது இரவு



2 comments:

  1. நல்ல கவிதை சுபா. ஆனால் கொஞ்சம் சோகமான கவிதை. தன்னை தொலைக்காதவர்கள் மட்டுமே மீள்கிறார்கள்.... தன்னைத் தொலைத்தவர்களின் காலடித் தடங்கள் கடலின் அடுத்த கரையில் கரையை நோக்கி!

    மீளாத சுவடிகளுக்கு சொந்தக்காரியா நீங்கள்?

    ReplyDelete