2019 - புதிய தேசங்கள், புதிய முகங்கள், புதிய அனுபவங்கள், சிறந்த பயணங்கள் என்றமைந்து இலக்கியம் மற்றும் நண்பர்கள் சந்திப்போடு இனிதாக நிறைவுற்றிருக்கிறது. வாசிப்பு இலக்கினின்று சற்றுக் குறைவே. எழுதுவதும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இந்த வலைப்பதிவுகளின் மீது ஒரு வருடத்தூசி படிந்திருக்கிறது. பழைய பதிவுகளில் சிலவற்றை வாசிக்கும் போது வேறு யாரோ எழுதியது போலத் தொனிக்கிறது. முகமறியாத கரம் தொடர்ந்து எழுதிச்செல்லும் மாற்றங்கள் நிறைந்த கதையென்றே வாழ்விருக்கிறது. மேலிருந்து ஆட்டுவிக்கும் அக்கரங்களுக்கு இத்தருணத்தில் நன்றி.
இவ்வருடம் சிறு குறிப்புகள் போலவேனும் எழுதும் எண்ணமிருக்கிறது. 2020 புதிய வாய்ப்புகளோடு காத்திருக்கிறது. 2000-த்துக்குப் பிறகு இது ஒரு முக்கியமான ஆண்டாக இருக்குமெனத் தோன்றுகிறது. இருபது வருடங்கள் ஐ.டி.துறையில் முடிகிறது இவ்வாண்டில். இனி வரும் வருடங்களில் என்ன காத்திருக்கிறது என்ற ஆர்வத்தோடு 2020ஐ வாசிக்கக் காத்திருக்கிறேன்.
2019-ல் வாசித்தவை.
1. நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
2. தமிழ்நாட்டில் காந்தி - தி.செ.சௌ.ராஜன்
3. பிறகு - பூமணி
4. The Philosophy Book - Will Buckingham
5. உலகம் சுற்றும் தமிழன் - ஏ.கே.செட்டியார்
6. தமிழ்நாடு: நூற்றாண்டுகளுக்கு முந்தைய பயணக்கட்டுரைகள் - ஏ.கே.செட்டியார்
7. பர்மாவிலிருந்து நடையாய் நடந்து - பசுபதி ஐயர்
8. ஆப்பிள் தேசம் - ஞானி
9. நடந்தாய் வாழி காவேரி - தி.ஜா
10. எட்டுத்திக்கும் - சுப்ரபாரதிமணியன்
11. The Tao of travel: enlightenments from lives on the road - Paul Theroux
12. உதயசூரியன்: ஜப்பான் பயணக்கட்டுரைகள் - தி.ஜா
13. Travellers tales of old Singapore - compiled by Michael Wise
14. காட்டில் உரிமை - மகாஸ்வேதாதேவி
15. சரஸ்வதி - ஒரு நதியின் மறைவு - மிஷல் தனினோ
16. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வீதநாயகம் பிள்ளை
17. The Valkyries - Paulo Coelho
18. The Story of Civilization (2 volumes) - Will Durant, Ariel Durant
19. Humiliated and Insulted - Dostoevsky
20. Steppenwolf - Hermann Hesse
21. வாஸவேச்வரம் - கிருத்திகா
22. Tolstoy selected stories
23. பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் - பெருந்தேவி
24. நித்யகன்னி - எம்.வி.வெங்கட்ராம்
25. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
26. மண்ணும் மனிதரும் - சிவராம் காரந்த்
27. நாயகிகள் நாயகர்கள் - சுரேஷ் பிரதீப்
28. வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்
29. குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்
30. அபி கவிதைகள்
31. நீலகண்டம் - சுனில் கிருஷ்ணன்
2019ன் பயணங்கள்:
1. கல்கத்தா, சிக்கிம் - பிப்ரவரி 2019
2. யோக்யகர்தா, போரோபுதூர்- இந்தோனேசியா - மார்ச் 2019
3. ஆக்லாண்ட், ரோடரூவா, வெலிங்டன், டுனெடின், குவீன்ஸ்லாண்ட், க்ரைஸ்ட்சர்ச் - நியூசிலாந்து - ஏப்ரல் & மே 2019
4. காஞ்சனபுரி, பேங்காக் - தாய்லாந்து - மே 2019
5. பிள்ளையார்பட்டி, தஞ்சை, கும்பகோணம், சீர்காழி, சிதம்பரம், திருச்சி - ஆகஸ்ட் 2019
6. நெல்சன் - நியூசிலாந்து - அக்டோபர் 2019
7. காசி, போத்கயா - நவம்பர் 2019
8. கோவை - டிசம்பர் 2019
அருமையான பதிவு சுபா. நிறைய நிறைய எழுதுங்கள்.
ReplyDelete